லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து
இறந்தவர்களின் நினைவுச்சின்னம்

வியாழன், ஆகத்து 20, 2009, ஸ்கொட்லாந்து:


ஸ்கொட்லாந்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்னார் லாக்கர்பி நகருக்கு மேலாக பயணிகள் விமானம் ஒன்றை குண்டுவைத்துத் தகர்த்ததற்காக சிறையிலிடப்பட்டிருந்த, அப்டல் பசட் அல் மெஃராஹி என்னும் நபர் விடுதலை செய்யப்பட்டு, தனது நாடான லிபியாவுக்கு விமானத்தில் சென்றார்.


குணப்படுத்த முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மெஃராஹி அவர்கள், மனிதாபிமான அடிப்படையில், விடுதலை செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.


அவர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளது.


1988, டிசம்பர் 21 ஆம் நாள் பான்-அம் விமானம் குண்டு வைத்து வீழ்த்தப்பட்டபோது, அதில் பலியான 270 பேரில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்களாவர். அவர்களது குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]