உள்ளடக்கத்துக்குச் செல்

லிஸ்பன் உடன்படிக்கைக்கு அயர்லாந்து வாக்காளர்கள் ஆதரவு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 3, 2009

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லிஸ்பன் உடன்படிக்கையின் ஆதரவு நிலை

██ ஆதரவு: 23 நாடுகள்

██ ஆரம்ப நிலையில்: போலந்து, செக் குடியரசு, அயர்லாந்து


அயர்லாந்து வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரங்களை வழங்குவதற்கான லிஸ்பன் உடன்படிக்கைக்கு உறுதியான சம்மதத்தை வழங்கியுள்ளனர்.


இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்த ஐரியப் பிரதமர் பிரையன் கவன், மக்கள் மிகத் தெளிவான தொனியில் இந்த சம்மதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்பட்டு வருகின்றபோதிலும் இதுவரை வெளியான முடிவுகளின்படி மூன்றிலிரண்டு பங்கு வாக்காளர்கள் உடன்படிக்கையை அங்கிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மெனுவல் பெராசோவும், கடந்த வருடம் உடன்படிக்கைக்கு எதிராக அமைந்த மக்கள் தீர்ப்புக்கு மாறாக, இம்முறை சாதகமாக வெளியாகியுள்ள மக்கள் அங்கிகாரத்தைப் பெரிதும் வரவேற்றுள்ளார்.


பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், ஐரோப்பியர்களுக்கு பொதுவான பிரச்சனைகள் குறித்து இனி இணைந்து பணியாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]