வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 33 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டம்பர் 18, 2009, பாகிஸ்தான்


பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள கொகாத் நகரருகே தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்கியதில் முப்பத்து மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


உசுத்தர்சாய் என்ற ஊரில், ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பரபரப்பாக கடைத்தெருவில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த வேளையில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிவந்து குண்டுதாரி வெடிக்கச்செய்துள்ளதாகத் தெரிகிறது.


சம்பவ இடம் சின்னாபின்னமடைந்து காணப்படுவதாக நேரில் கண்டவர்கள் வருணிக்கின்றனர்.


கொல்லப்பட்டவர்களில் அதிகம் பேர் இந்தப் பகுதியில் அதிகமாக வாழும் சியா முஸ்லிம்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். தாலிபான்களோடு தொடர்புடைய ஒரு இசுலாமியவாத ஆயுதக் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கூறியுள்ளது.

மூலம்[தொகு]