வட கொரியா தனது எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 20, 2009, வட கொரியா:


இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவு முறுகலை நெகிழவைக்கும் சமிக்ஞையாக , தென்கொரியாவுக்கான எல்லையில், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக வடகொரியா கூறியுள்ளது.


பதற்றம் அதிகரித்த சூழ்நிலையில், வடகொரியாவின் தொழிற்துறை வலயங்களுக்குள் செல்லும் தென்கொரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டில் இந்த போக்குவரத்து இறுக்கம் கொண்டுவரப்பட்டது.


தென்கொரியாவில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இந்த வார ஆரம்பத்தில் வடகொரியா கூறியிருந்தது.


அத்துடன் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டா ஜுங்கின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் அது அறிவித்தது.

மூலம்[தொகு]