விக்கிசெய்தி:2008/மார்ச்

விக்கிசெய்தி இலிருந்து
<ஜனவரி 2008 மார்ச் 2008 ஏப்ரல் 2008>
 • மார்ச் 27: 1860 ஏப்ரல் 9 இல் போனாட்டோகிராஃப் மூலம் எடுவார்ட்-லெயோன் மார்ட்டின்வில் என்பவரினால் பதியப்பட்ட மனிதக் குரல் ஒன்றை ஐக்கிய அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். (நியூயோர்க் டைம்ஸ்)
 • மார்ச் 26: எண்டெவர் விண்ணோடம் 16-நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு புளோரிடாவில் இரவுவேளையில் தரையிறங்கியது. (நியூயோர்க் டைம்ஸ்)
 • மார்ச் 25: ஆபிரிக்க ஒன்றியத்தின் உதவியுடன் கொமரோஸ் இராணுவம் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சுவான் தீவில் தரையிறங்கியது.(பிபிசி)
 • மார்ச் 24:
  • பூட்டானில் இடம்பெற்ற முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் பூட்டான் அமைதி மற்றும் செழிப்புக் கட்சி வெற்றி பெற்றது. (ரொய்ட்டர்ஸ்)
  • பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானி தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
 • மார்ச் 23: ஈராக் போரில் இறந்த ஐக்கிய அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ எட்டியது. (சிஎன்என்)
 • மார்ச் 22: சீனக் குடியரசின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மா யிங்-ஜியோ 58% வாக்குகளைப் பெற்று அதிபரானார். (புளூம்பேர்க்)
 • மார்ச் 17: இரண்டாம் உலகப் போரின் போது 645 கடற்படையினருடன் மூழ்கடிக்கப்பட்ட HMAS சிட்னி என்ற ஆஸ்திரேலியப் போர்க்கப்பல் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. (ஏபிசி)
 • மார்ச் 16:
  • இரண்டாம் உலகப் போரின் போது 1941 ஆம் ஆண்டு மூழ்கிய ஜேர்மானியப் போர்க்கப்பலான கோர்மொரான் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
  • மணிப்பூரில் இராணுவ முகாம் ஒன்று தாக்கப்பட்டதில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
 • மார்ச் 15:
  • ஹூ சிங்தாவ் சீன மக்கள் குடியரசின் அரசு தலைவராகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ராணுவக் கமிஷனின் தலைவராகவும் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார். (சின்ஹுவா)
  • சீனாவின் திபெத் சுயாட்சிப் பிரிவில்] திபெத்தின் விடுதலையை வேண்டி ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினர் சுட்டதில் 30 முதல் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். (பிபிசி)
 • மார்ச் 13: ஈராக்கில் பெப்ரவரி 29, 2008 இல் கடத்தப்பட்ட கத்தோலிக்க பேராயர் "மார் பவுலொஸ் ஃப்ராஜ் ராஹோ என்பவரின் இறந்த உடல் மோசுல் நகரில் கண்டெடுக்கப்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
 • மார்ச் 11: என்டெவர் விண்ணோடம் அனைத்துலக விண்வெளி மையத்தை நோக்கி ஏவப்பட்டது. (நாசா)
 • மார்ச் 8: மலேசியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. அமைச்சர் டத்தோ சாமிவேலு தோல்வியுற்றார். (சிஎன்என்), (சின்ஹுவா)
 • மார்ச் 6:
  • இஸ்ரேலின் ஜெரூசலேம் நகரில் யூத மதப் பள்ளி ஒன்றில் அரபு துப்பாக்கிதாரி சுட்டதில் எட்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
  • உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர்களில் ஒருவரான விக்டர் பூட் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
 • மார்ச் 4: பாகிஸ்தான் நகரான லாகூரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
 • மார்ச் 2: ரஷ்யாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் திமித்ரி மெட்வெடவ் வெற்றி பெற்றார். (தி இன்டிபென்டன்ட்)
 • மார்ச் 1:
  • ஐரோப்பாவின் பல இடங்களில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தினால் ஆஸ்திரியாவில் 4 பேரும் ஜெர்மனியில் 2 பேரும் செக் குடியரசில் 2 பேரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
  • ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானில் இடம்பெற்ற கலவரங்களை அடுத்து நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (ரொய்ட்டர்ஸ்)
  • காசாப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர். (ஜெருசலேம் போஸ்ட்)
  • எக்குவாடோரில் கொலம்பிய புரட்சி இராணுவத்தின் இரண்டாவது தலைவர் ராவூல் ரேயஸ் கொலம்பியாவின் இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். (எல் டியெம்போ)
"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2008/மார்ச்&oldid=5834" இலிருந்து மீள்விக்கப்பட்டது