வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு, 33 பேர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 16, 2007

ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலையில் நடைப்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தம் 33 பேர் இறந்தும் 15 பேர் வரையில் படுகாயமும் அடைந்தனர். காவல்துறையினரின் அறிக்கையின்படி கொலையாளி தற்கொலை புரிந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் நொரிஸ் கட்டடம்

இச்சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியரும் இறந்துள்ளார்.

மூலம்[தொகு]