வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 28, 2009

கார்பன் நுண்குழாய்


வேளாண்மையிலும் நானோ தொழில்நுட்பத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள். தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் (carbon nanotubes) இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பம் கொண்ட வேளாண்மைப் பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள், புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


தலைமுடியின் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட கார்பன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகள் சாதாரண விதைகளை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் ஆர்கன்சா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் சேர்ந்து சிறிதளவு மண் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.


இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.


சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.


இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இது வரை அந்த நுண்குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் அறிவியல் அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

மூலம்