உள்ளடக்கத்துக்குச் செல்

வொக்ஸ்வாகன், போர்ஷ் கார் நிறுவனங்கள் இணைவு

விக்கிசெய்தி இலிருந்து
2010 போர்ஷ் 911

வியாழன், சூலை 23, 2009 ஜெர்மனி:

ஜெர்மனியின் தானுந்து நிறுவனமான வொக்ஸ்வாகன் தனது போட்டியாளரான போர்ஷ் நிறுவனத்தை கையேற்பதற்கான தனது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த இணைவு முயற்சி 2011 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் முற்றுப் பெறும் எனக் கருதப்படுகிறது.


போர்சின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து வெண்டலின் வீடக்கிங் என்பவர் புதன்கிழமையன்று விலகியமை தொடர்பில் தமது பதில் நடவடிக்கையை தீர்மானிக்கும் பொருட்டு அதன்போட்டி நிறுவனமான வொக்ஸ்வாகனின் நிர்வாகக்குழு இன்று கூடி ஆராய்ந்தது.


வொக்ஸ்வகன் கோல்ஃப் VI GTI

வெண்டலின் பதவி விலகல் நிகழ்வு இரண்டு முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களினதும் ஒன்றிணைப்புக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமாக போர்ஷ் மாறும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வொக்ஸ்வாகன் நிறுவனத்தை கையேற்கும் போர்ஷ் நிறுவனத்தின் முன்னைய தோல்விகரமான முயற்சிக்கு வெண்டலின் வீடக்கிங்கே பொறுப்பு எனக் கூறப்பட்டது. போர்ஷ் நிறுவனத்தை 9 பில்லியன் யூரோக்கள் கடன் பெறும் நிலைக்கு தள்ளிய இந்த திட்டம் இந்த வருட ஆரம்பத்தில் கைவிடப்பட்டது.

மூலம்[தொகு]