ஹஜ்ரத் சைதானி பி தர்ஹா மார்சிங் பேட்டை மெயின் ரோடு பீமநகர் திருச்சிராப்பள்ளி

விக்கிசெய்தி இலிருந்து

ஹஜ்ரத் சைதானி பி தர்கா மற்றும் அரபி உருது மதரஸா இது திருச்சிராப்பள்ளி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டை மெயின் ரோட்டில் போலீஸ் காலனி அருகில் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. இந்த தர்கா வில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஹஜ்ரத் சைதாபி என்ற பெண் இறை நல்லடியார் நல்அடக்கம் செய்யப்பட்டு அவருடைய அடக்கஸ்தலத்தை அப்போது இருந்த மக்கள் பாதுகாத்து அதன் மேல் கட்டிடம் கட்டி அதில் பாத்தியாக்கள் சந்தனக்கூடு வைபவங்கள் செய்து வந்துள்ளனர். அதன்பின் உள்ள மக்களும் இன்று வரை அவற்றை பாதுகாத்து வந்துள்ளனர். இந்த தர்காவிற்கு திருச்சியை ஆண்ட மங்கம்மா ராணி மற்றும் சில சிற்றரசர்கள் இந்த தர்காவிற்கு ஏராளமான சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது தற்போது இந்த தர்கா ஒரு கமிட்டி நிர்வாகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. தற்போது இந்த தர்காவில் அரபி மற்றும் உருது மதரசாவில் ஏராளமான ஆண் பெண் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காலை மாலை இருவேளையும் ஓதிக் கொடுக்கப்பட்டு பயனடைந்து வருகிறார்கள். இந்த தர்காவிற்கு சொந்தமாக இப்போது உள்ள மொத்த இடம் 2999 சதுர அடிகள் மட்டுமே. இப்போது இந்த தர்கா உடைய இடத்தை கட்டிடம் கட்டி அரபி உருது மதரசாவையும் பள்ளிவாசலாகவும் கட்டி அங்குள்ள மக்கள் பயனடைய நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.