உள்ளடக்கத்துக்குச் செல்

1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த மஹாவீரர் சிலை

[தொகு]

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த, துரைபெரும்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், ஐந்து அடி ஆழத்தில் புதைந்திருந்த மஹாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த நெமிலி தாசில்தார் சிலையை கைப்பற்றி, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் ஆய்வுக்கு அனுப்பினார்.

அருங்காட்சியக காப்பாட்சியாளர் கூறியது

[தொகு]

ஆய்வுக்கு பின், அருங்காட்சியக காப்பாட்சியாளர் கூறியது: பல்லவர், சோழர் காலத்தில், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள், வேலூர் மாவட்டத்தில் அதிகளவு வாழ்ந்துள்ளனர். இதனால், இதுவரை சமண மதத்தைச் சேர்ந்த, எட்டு தீர்த்தங்கரர்களின் கற்சிலைகள், பல காலகட்டத்தில் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. துரைபெரும்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மஹாவீரர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கற்சிலையின் உயரம், மூன்று அடியாக உள்ளது. கலெக்டரின் ஒப்புதலுக்கு பின், அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். [1]

மூலம்

[தொகு]
  1. 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை