1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு!

விக்கிசெய்தி இலிருந்து

1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு!

24.11.2016.

இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து சுருக்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.

அவருடைய பார்வையில் " இது கிராம மக்களை மிகவும் பாதிக்கும். இது ஒரு முறைப்படுத்தப்பட்ட கொள்ளை" எனவும் "சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்" எனவும் விமர்சித்தார்.


இதன் இறுதி விளைவு குறித்து நமக்கு எதுவும் தெரியாது என்றும் தேசத்தின் வருமானம் மற்றும் மொத்த உற்பத்தி விகிதம் 2 சதவிகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மன்மோகன் சிங் பேசும் போது அவையில் இருந்தார்.