உள்ளடக்கத்துக்குச் செல்

2008 அனுராதபுரக் குண்டுவெடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 6, 2008 இலங்கை:

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று காலை இலங்கை நேரப்படி 8.45அளவில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஜானகபெரேராவின் மனைவி, வைத்தியகாலாநிதி ஜோன்புள்ளே, அவரது மனைவி, உள்ளிட்ட ஐக்கியதேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் 80 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது மாகாணத்தின் அதி கூடிய விருப்பு வாக்குகளை ஜானக பெரேரா பெற்றுக் கொண்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஜானக பெரேரா அண்மைக்காலமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athirvu.com

"https://ta.wikinews.org/wiki/2008_அனுராதபுரக்_குண்டுவெடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது