2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 31, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாக்கித்தான் அணியை 29 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இந்தப் போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் பார்வையிட்டனர்.


நேற்று மும்பை நகரில் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி 50 பந்துப் பரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.


முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வீரட் கோலி (9) யுவராஜ் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர். டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களுடனும் சகீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார். வகாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.


261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய பாக்கித்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.


இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டெண்டுல்கர் தெரிவானார்.


மற்றொரு அரையிறுதியில் நியுசிலாந்தை வென்று ஏற்கனவே இறுதியாட்டத்துக்குள் நுழைந்துள்ள இலங்கையை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை நகரில் இந்த ஆட்டம் நடைபெறும்.



மூலம்[தொகு]