உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயதங்களுடன் வடகொரியா விமானம் தாய்லாந்தில் மறிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 12, 2009

தாய்லாந்தில் பாங்காக் இருப்பிடம்
பாங்காக் டான் முஆங்க் வானூர்தி நிலையம்
வடகொரியா


வடகொரியாவில் இருந்து வந்த சரக்கு வானூர்தி அவசரமாக எரிபொருள் நிரப்ப தாய்லாந்து பாங்காக் நிலையத்தில் இறங்கியபோது அது தாய்லாந்து அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த IL76 வானூர்தி ஆகும்.

இதில் 40 டன்னுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ தளவாடங்கள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 4 ஊழியர்கள் கசக்கசத்தான் மற்றும் ஒருவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு உளவு அமைப்பு தந்த துப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கையில் இறங்கியதாக ருயூட்டர்ஸ் நிறுவனத்துக்கு ஓர் அதிகாரி தெரிவித்தார். அந்த வெளிநாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனவும் அதிகாரபூர்வமற்ற வகையில் அவர் தெரிவித்தார். அந்த வானூர்தி தெற்கு ஆசியா-வுக்கு அடையாளம் தெரியாத இடத்திற்கு செல்வதாகவும் அது பாக்கித்தானாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் இந்த வானூர்தி இலங்கைக்கு செல்வதாக சொல்கின்றன.

தாய்லாந்து துணை பிரதம மந்திரி இந்த வானூர்தியில் எண்ணெய் தோண்டும் கருவிகள் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததாகவும் ஆனால் சோதனையில் அனைத்தும் ஆயுதங்கள் என்று தெரியவந்ததாக தெரிவித்தார்.

மே மாதம் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனையின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை அதன் ஆயுத விற்பனையை தடுக்கும் விதமாக மேலும் பல தடைகளை விதித்துள்ளது. ஆயுத விற்பனையின் மூலம் வடகொரியா ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டுவதாக கூறப்படுகிறது.

மூலம்

[தொகு]

பிபிசி

ருயூட்டர்ஸ்