உள்ளடக்கத்துக்குச் செல்

கராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 6, 2010

பாக்கிசுத்தானின் பெரிய நகரான கராச்சியில் மத ஊர்வலத்திற்கு சியா முசுலிம்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது நேற்று வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.


கராச்சி, பாக்கிசுத்தான்

தற்கொலை நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்தார் என அறியப்படுகிறது. சிலர் இது தற்கொலை தாக்குதல் அல்ல என்றும் வெடிகுண்டு பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.


பாதிக்கப்பட்டவர்கள் ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை அடுத்து மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பகுதிக்கருகில் இரண்டாவது குண்டு வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.


இத்தாக்குதல்களுக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. இது தொடர்பாக பாக்கிசுத்தானின் சன்னி பிரிவு தீவிரவாத இயக்கம் மீது ஐயப்படுகிறார்கள்.


40 நாட்களுக்கு முன் கடந்த டிசம்பர் மாதத்தில் கராச்சியில் சியா பிரிவு முசுலிம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் பலியாயினர். இத்தாக்குதலை அடுத்து அப்பகுதியில் இரு இசுலாமியப் பிரிவுகளுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை காணப்படுகிறது.

மூலம்

[தொகு]