உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பாலஸ்தீனக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 2, 2009, ஜெருசலேம், இசுரேல்:


மத்திய கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் பகுதியில் இரண்டு வீடுகளில் குடியிருந்த ஒன்பது பாலஸ்தீனக் குடும்பங்களை இசுரேலியப் போலீஸ் இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.


அதிகாலை பொழுது புலர்வதற்கு முன்னால் பெருந்தொகையான போலீஸார் நடத்திய இந்த நடவடிக்கை முடிந்த உடனயே யூதக் குடியேறிகள் அந்த வீடுகளுக்குள் குடியேறி விட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.


இந்த வீடுகள் இருக்கும் நிலம் யூதக் குடும்பங்களுக்கே முதலில் உரித்தாக இருந்தது என்று இசுரேலிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே இந்தப் போலீஸ் நடவடிக்கை வந்துள்ளது.


மூத்த ஐ.நா. அதிகாரி ராபர்ட் செரி அவர்கள் இந்த வெளியேற்றங்கள் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் சார்பில் பேசிய அதிகாரி இதைச் சட்டத்துக்குப் புறம்பான, மனிதாபிமான செயலென்று தெரிவித்துள்ளார்.


இசுரேல் கிழக்கு ஜெருசலேமை 1967 இல் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வாக்கிரமிப்பை இதுவரை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை.


மூலம்

[தொகு]