உள்ளடக்கத்துக்குச் செல்

குஜராத்தில் நச்சு சாராயம் குடித்து 127 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 11, 2009 குஜராத், இதியா:

இந்தியாவின் குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 126 ஐத் தாண்டிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் விற்றது தொடர்பில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் இன்னமும் விற்பனையில் இருக்கலாம் என்ற அச்சம் இன்னும் இருக்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால், கள்ளச் சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த பலர் பலியாயினர். இதை தொடர்ந்து பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 5 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகி இருப்பதாக அகமதாபாத் நகராட்சி துணை கமிஷ்னர் திலீப் மகாஜன் தெரிவித்துள்ளார்.

மூலம்

[தொகு]