சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள் உருவாக்கப்படும்
வியாழன், ஆகத்து 27, 2009, இங்கிலாந்து:
காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப வாய்ப்பு வழிகள் குறித்து பிரித்தானியாவில் நடந்த ஓர் மீளாய்வில், கரியமில வாயுவை காற்றிலிருந்து உறிஞ்சி உள்வாங்கிக்கொள்ளும் செயற்கை மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏனைய சில யோசனைகளைவிட செலவு குறைவானதாகவும் செயல்பாட்டுச் சாத்தியம் அதிகம் கொண்டதாகவும் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
சூரிய ஒளியை திசை திருப்புவதற்கான பிரம்மாண்ட கண்ணாடிகளை விண்வெளியில் நிறுவுவது போன்ற யோசனைகளை யதார்த்தத்துக்கு ஒத்துவராதவை என்று கூறி பிரித்தானியாவின் இயந்திரப் பொறியியல் வல்லுநர்களின் அமைப்பு நிராகரித்துள்ளது.
ஆனால் இருபதாயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கப்படக்கூடிய இந்த செயற்கை மரம் ஒன்று, இருபது கார்கள் வெளியேற்றக்கூடிய அளவிலான கரியமிலவாயுவை காற்றுமண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
மூலம்
[தொகு]- 'Artificial trees' to cut carbon, பிபிசி