பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்களில் 16 பேர் இறப்பு
ஞாயிறு, செப்டம்பர் 27, 2009, பாகிஸ்தான்:
வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தினரை இலக்கு வைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட இருவேறு தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
முதலாவது தாக்குதல் பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்றது. இங்கு இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர். முன்னூறு கிலோ எடையுடைய வெடிகுண்டை தற்கொலைக் குண்டுதாரி காவல் நிலையம் மீது வெடிக்க வைத்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் பொலிஸ் நிலை யம் தரைமட்டமாகியது.
இச்சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் இதே மாகாணத்திலுள்ள பெசாவர் நகரில் மற்றொரு குண்டு வெடித்தது. இராணுவத்தினரின் வங்கி ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதலில் பத்துப் பேர் கொல்லப்பட்டதுடன் 88 பேர் காயமடைந்தனர். கட்டடங்கள் வாகனங்கள் என்பன இதில் சேதமடைந்தன.
மூலம்
[தொகு]- Blasts rock north-west Pakistan, பிபிசி