உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சில்வேனியாவில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறப்பு, 15 பேர் காயம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 5, 2009, ஐக்கிய அமெரிக்கா:


அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் புகுந்த மர்ம மனிதன் ஒருவன் அங்கு நடனப்பயிற்சி நடக்கும் அறைக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியானார்கள். பிறகு அவனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனான். 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் 3 பேர் பெண்கள்.


அவன் எதுவும் பேசாமல் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டான். அவன் சுட்ட போது அந்த இடத்தில் 60 முதல் 70 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு தம்பதி கூறுகையில், அவன் தலை வழுக்கையாக இருந்தது. முகமூடி அணிந்து இருந்தான். அவன் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். கிட்டத்தட்ட 10 வினாடிகள் சுட்டான். அதன் பிறகு அவன் தன் தலை யில் சுட்டுக்கொண்டு இறந்துபோனான் என்று தெரிவித்தனர்.


இங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த எவரையாவது இலக்குவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. துப்பாக்கிதாரி எதனையும் கூறவில்லையெனவும் அவரது இலக்கு சரியாகத் தெரிந்திருக்கும் பட்சத்திலேயே அந்த வகுப்புக்குள் அவர் நேராகச் சென்றிருக்க முடியுமெனவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்

[தொகு]