உள்ளடக்கத்துக்குச் செல்

மடெய்ரா தீவில் பெரும் மழை, 38 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 21, 2010

அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள மடெய்ரா தீவில் பெரும் மழை, மண்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் மடெய்ரா தீவு

போர்த்துக்கல்லின் ஆளுகைக்குட்பட்ட தீவான மடெய்ராவின் பிராந்தியத் தலைநகரான புன்ச்சாலில் மண்சரிவு ஏற்பட்டு பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.


பலர் மண்சரிவுகளுக்கிடையில் அகப்பட்டிருக்கலாம் எனவும் இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அசப்படுகிறது. மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.


thumbமடெய்ரா தீவு
thumbமடெய்ரா தீவு

போர்த்துக்கல் தனது இராணுவத்தினரை அங்கு உடனடியாக அனுப்பு வைத்துள்ளது. சேதங்களைப் பார்வையிட்ட போர்த்துக்கல் பிரதமர் ஒசே சொக்கிராட்டெஸ் "தேவைப்படும் உதவிகள் அனைத்தும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்" என உறுதியளித்தார்.


போர்த்துக்கல்லில் இருந்து 900 கிமீ தூரத்தில் மெடெய்ரா அமைந்திருக்கிறது. இது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் ஒரு பிரபல்யமான தளமாகும்.


மரங்கள் பல வீழ்ந்து கிடந்ததாகவும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்

[தொகு]