உள்ளடக்கத்துக்குச் செல்

விண் சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை ஏவும் தென்கொரியாவின் முதல் முயற்சி தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து
தென்கொரியாவின் அமைவிடம்

செவ்வாய், ஆகத்து 25, 2009, சியோல், தென்கொரியா:


தென் கொரியா தனது சொந்த பிராந்தியத்தில் இருந்து விண் சுற்றுப்பாதைக்கு நாரோ-1 என்று அழைக்கப்பட்ட செயற்கை கோளை ஏவும் முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தது. செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டு, ராக்கட் படிநிலைகளும் திட்டமிட்டபடி பிரிக்கப்பட்டன, ஆனால், அந்த செயற்கை கோளை உரிய சுற்றுப்பாதைக்கு ஏவமுடியவில்லை.


நாரோ-1 ரொக்கெட்

பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும், வணிக நோக்கிலானது என்றும் தென்கொரிய அரசாங்கம் கூறுகின்றது.


மில்லியன் தென்கொரிய மக்கள் இந்தக் காட்சியைக் கண்டு களித்தனர். ஆனாலும் வடகொரியா இந்நடவடிக்கை குறித்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரலில் ராக்கட்டை ஏவியதை அடுத்து ஐ. நா தடைக்கு உள்ளான வடகொரியா, ”தென்கொரியாவின் இந்த நடவடிக்கையை உலகம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறது” என்பதை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக கூறியிருக்கிறது.


இந்த செய்மதி பூமியின் சுற்றுப்பாதையில் இடப்பட்டிருந்தாலும், அதற்கென உரிய சுற்றுப்பாதைக்கு வரமுடியவில்லை என தென்கொரிய அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் ஆன் பியோங்-மான் தெரிவித்தார். செய்மதி 360கிமீ (225 மைல்கள்) உயரத்தை அடைந்தது, ஆனால் 302 கிமீ உயரத்திலேயே பிரிக்கப்பட அனுப்பப்பட்டிருந்தது எனவும், ரஷ்ய, கொரிய விஞ்ஞானிகள் இது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


நாரோ-1 (Naro-1, அல்லது கே.எஸ்.எல்.வீ.-01) என அழைக்கப்படும் ரொக்கட் 33 மீட்டர் நீளமுடை யது. தென் கொரியாவின் முதலாவது ரொக்கட்டின் இயந்திரம் ரஷ்யாவில் வாங்கப்ப ட்டது. ஆனால் நேற்று ஏவப்பட்ட ரொக்கட்டின் இயந்திரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்த ரொக்கட் வெற்றிகரமாக இயக்கப்பட்டிருந்தால் உலகின் ரொக்கட் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தென்கொரியா பத்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். 419 மில்லியன் டொலர் பணத்தை தென் கொரியா இதற்கென முதலீடு செய்துள்ளது.

மூலம்

[தொகு]