'சிவாஜி' படம் 2007 மே 8-ல் வெளியீடு

விக்கிசெய்தி இலிருந்து

'சிவாஜி' படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு

ரஜினியின் `சிவாஜி' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி'யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`சிவாஜி' பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

`சிவாஜி' படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர்.

`சிவாஜி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் `சிவாஜி' யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே தேதியில் கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் `சிவாஜி' படம் ரூ. 3.10 கோடிக்கு விற் பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம்.