அமேசானின் ஜிப்பி கையோடு, கிண்டலே வசீகரம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 29, 2010


கிண்டலே-யின் புதிய சாதனம் கிண்டலே டிஎக்ஸ் (கிராபைட்). முற்றிலும் புதிய அனுபவம் உடையதாகவும், புதிய நிறத்தில், புதிய பொத்தான்கள் வடிவங்களும் இது வரை இல்லாத வகையில் வசீகரம் செய்கிறது. இது கிண்டலேவின் மூன்றாம் தலைமுறைச் சாதனம், இரண்டு பதிப்புகளில்.


அமேசானின் கிண்டலே டிஎக்ஸ் (கிரபைட்டு)

இந்த கிண்டலே டிஎக்ஸ் (கிராபைட்) கையிற்கு அடக்கமாக வைத்துக் கொள்ளக்கூடிய இ-வாசிப்பகம் (இ-படிப்பகம் அல்லது இ-ரீடர்). இது வேறு நிறுவன சாதனம் அல்லது இ-வாசிப்பகத்தை விட எடை கூடியதாக 8.7 அவுன்சஸ் எடையாக உள்ளது. ஆனால் கிண்டலேயின் முந்தைய சாதனத்தை விட 15 விழுக்காடுகள் எடை குறைந்ததாக உள்ளது.


இதில் முக்கியாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் புதிய பரிமாணங்கள் வை-பை வசதி போன்றவைகளை கூட்டினாலும், கிண்டலேவின் வடிவமைப்பு மேம்பட்டுயிருக்கிறது, மேலும் அதன் திரை தொழில்நுட்பமும் வளர்ந்து இருக்கிறது.


இந்த புதிய இ-வாசிப்பகம் கிராபைட் வன் கரிப்பொருள் (பென்சிற்கரி) போன்றவற்றினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.


கிண்டலே துணை முதன்மை அதிபர் ஸ்டீவ் கேசெல் கடந்த ஆண்டில் அதிகமாக விற்பனையானது எண்முறை புத்தகம் (இ-புத்தகம்) என்றும், இந்த இ-படிப்பகம் 15 விழுக்காடுகள் எடை குறைந்ததாகவும், 21 விழுக்காடுகள் அளவு சிறியதாக உள்ளது என்றும் கூறினார்.மேலும் ஆகத்து 27 பிறகு புதிய கிண்டலே யுகே இ-கடையில் 400.000 இ-புத்தகங்கள் சேர்க்கப்படும் என்று கூறினார்.

மூலம்[தொகு]