அவதார் திரைப்படம் கோல்டன் குளோப் விருதைப் பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 18, 2010

ஜேம்ஸ் கமரோனால் இயக்கப்பட்டு உலகம் எங்கும் திரையிடப்பட்டு காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திரைப்படமும் வசூலில் டைட்டானிக் திரைப்படத்திற்கு அடுத்தபடியாகவுள்ளதுமான அவதார் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது லாஸ் ஏஞ்சல்சில் நடந்த நிகழ்வில் வழங்கப்பட்டுள்ளது.


இயக்குனர் ஜேம்ஸ் கமரோன்

இந்த திரைப்படத்தில் சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் கமரோனுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை ஜேம்ஸ் கமரோனின் அவதார் திரைப்படம் பெற்றுக்கொள்கின்றுது.


கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள் பல ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளதால் அவதார் திரைப்படம் ஆஸ்கார் விருதையும் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் கமரோன் இயக்கிய டைட்டானிக் திரைப்படமும் 1998இல் 11 ஆஸ்கார் விருதுகளை அள்ளிக்கொண்டமையையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மூலம்