ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்
Appearance
ஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்
- 27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு
- 9 ஏப்பிரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு
- 21 செப்டெம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு
ஆப்கானிஸ்தானின் அமைவிடம்
ஞாயிறு, மே 27, 2012
ஆப்கானித்தானின் கிழக்கு மாகாணமான பாக்த்தியாவில் நேட்டோ படையினர் வான் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை சூரி காயில் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் ஆறு குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் கொல்லப்பட்டனர். இத்தகவல் குறித்து தாம் விசாரித்து வருவதாக நேட்டோ அறிவித்துள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் தலிபான்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர் என மாகாண அரசுப் பெச்சாளர் ரொகுல்லா சமூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று சனிக்கிழமையன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் நான்கு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- Nato air strike 'kills Afghan family', பிபிசி, மே 27, 2012
- Afghan family killed in NATO airstrike, அல்ஜசீரா, மே 27, 2012