ஆப்கானிஸ்தான் நேட்டோ தளம் மீது தாலிபான்கள் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 30, 2010

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் உள்ள நேட்டோ இராணுவத் தளம் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெனரல் டேவிட் பெட்ரியஸ் அமெரிக்கப் படைகளின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இன்று புதன்கிழமை தளத்தைச் சுற்றி துப்பாக்கிச் அத்தங்கள் கேட்டதாகவும், அமெரிக்க உலங்கு வானூர்திகள் வீனில் சுற்றி வட்டமிடட்தாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


6 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தாலிபான்கள் அல்ஜசீரா செய்தியாளருக்குத் தெரிவித்தனர். தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் வாகனத்தில் வந்து தளத்தின் வாயிலில் குண்டை வெடிக்க வைத்ததாகவும், ஏனையோர் தானியங்கிகள் மூலம் விமானநிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"விமானநிலையத்தினுள் தாம் நுழைந்ததாக தாலிபான்கள் தமக்குத் தெரிவித்ததாக காபூலில் உள்ள அல்ஜசீரா செய்தியாளர் செய்னா கோடர் தெரிவித்தார்.


பதில் தாக்குதலில் எட்டு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், தமது தரப்பில் இரு படையினர் காயமுற்றதாகவும் நேட்டோ படையினர் தெரிவித்தனர்.

மூலம்[தொகு]