இசுலாமியக் கிளர்ச்சியாளர்களுடன் தாய்லாந்து அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 28, 2013

தாய்லாந்தின் தெற்கே பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இசுலாமியப் போராளிகளுடன் தாய்லாந்து அரசு முதற்தடவையாக அமைதி உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.


தாய்லாந்தில் கிளர்ச்சியில் ஈடுபடும் கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றான தேசியப் புரட்சி முன்னணி (BRN) என்ற அமைப்புடன் மலேசியாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை அடுத்து மலேசியப் பிரதமர் நசீப் ரசாக், மற்றும் தாய்லாந்துப் பிரதமர் யிங்லக் சினவாத்ராவிற்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இன்று இடம்பெறவுள்ளன. இப்பேச்சுக்களை அடுத்தே அமைதி உடன்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.


2004 ஆம் ஆண்டில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஆரம்பமான சர்ச்சைகளை அடுத்து அங்கு குறைந்தது 5,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பெரும்பான்மைப் பௌத்தர்களிடம் இருந்து கூடுதல் சுயாட்சியுடன் கூடிய அதிகாரங்களை முசுலிம்கள் கோருகின்றனர்.


மூலம்[தொகு]