இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
சனி, சனவரி 25, 2014
கடந்த ஆண்டு முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களும் இன்று இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
111 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிபதி முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனாலும், மீனவர்கள் தமது படகுகளைத் திரும்பப் பெறாமல் நாடு திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இதனை அடுத்து இது குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் சனவரி 17 அன்று திருகோணமலை நீதிபதி ரீ. சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 15 படகுகளையும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மீனவர்களும் படகுகளும் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு விடுவிக்கப்படுவர்.
இதற்கிடையில், கடந்த 16-ம் தேதி இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கை படையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்
[தொகு]- 111 இந்திய மீனவர்கள் விடுதலை: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு, வீரகேசரி
- 111 இந்திய மீனவர்கள் நாளை ஒப்படைப்பு!, சனவரி 24, 2014
- மீனவர்கள் 40 பேர் விடுதலை : இலங்கை கோர்ட் உத்தரவு, தினகரன், சனவரி 24, 2014
- தமிழக மீனவர்கள் 71 பேர் ஒப்படைப்பு, புதிய தலைமுறை ஜனவரி 24, 2014