இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 22, 2012

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவர் ஆகிறார்.

பிரணாப் முகர்ஜி

சமீபத்தில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார், தேசிய ஜனநாயகக் கூட்டணி சங்மாவை ஆதரித்தது.


இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் மாலை 4.20 மணி நிலவரப்படி வெற்றி பெறத் தேவையான பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பிரணாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 776 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் பிரணாப் முகர்ஜி 527 உறுப்பினர்களின் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சங்மா 206 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்த 776 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டில் பதவி வரும் சூலை 24 ம் தேதி முடிவுறுவதால், 25 ம் தேதி பிரணாப் புதிய குடியரசுத் தலைவராகப் பதவியேற்பார். இவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.


மூலம்[தொகு]