இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 7, 2012


2012ல் உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் உத்தராகண்டத்தில் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. மணிப்பூரில் காங்கிரசு ஆட்சி அமைக்கிறது.

உத்திரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை சமாஜ்வாதி கட்சி 224 தொகுதிகளில் வென்றது. உத்திராகண்டத்தின் 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை, காங்கிரசு 32 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் வென்றுள்ளதால் ஆட்சி அமைப்பதில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் 117 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகள் தேவை, அகாலி தளம் 56 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. காங்கிரசு 46 தொகுதிகளில் வென்றுள்ளது. மணிப்பூரின் 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை, காங்கிரசு 42 தொகுதிகளில் வென்றது. கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை, பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன.



மூலம்[தொகு]