இலங்கை இரட்டைக் குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 7, 2013

இலங்கையில் கடந்த காலங்களில் தற்காலிகமாக கைவிடப்பட்ட இரட்டை குடியுரிமைச் சட்டங்களை மீண்டும் அமுல்படுத்த குடிவரவு கட்டுப்பாட்டுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் இரட்டை குடியுரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் சூலாநந்தா பெரேரா தெரிவித்திருந்தார். கடந்த பல மாதங்களாக இந்த சட்டம், சட்டவரைஞர் திணைக்களத்தில் பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த முறைமைகளை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அமுலாக்கும் பொருட்டு, தற்காலிகமாக இது கைவிடப்பட்டிருந்ததாக வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரிக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரட்டை குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்வரும் சனவரி மாதம் 18ம் திகதி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மூலம்[தொகு]