இலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 8, 2011

இலங்கையில் 2009 இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறுவதற்காக ஐநா செயலாளர் பான் கி மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவைக் கலைக்க ஐநா செயலர் உத்தரவிட்டுள்ளார்.


தருஸ்மான் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. இந்த அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஐ.நா.பொதுச்செயலரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


ஆனால் இந்த அறிக்கையை இலங்கை அரசு ஏற்கவில்லை. அறிக்கையைக் கண்டித்து இலங்கையில் மே 1-ம் தேதி பேரணியையும் இலங்கை அரசு நடத்தியது.


இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிட்டதால் அக்குழுவினை கலைப்பதாக பான் கி மூன் அறிவித்துள்ளார். இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்குப் பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]