இலங்கையின் நியமநேரம் அறிவிப்பு
Appearance
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
செவ்வாய், ஏப்பிரல் 12, 2011
இலங்கையின் நியமநேரம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது. தேசிய நியமங்களுக்கமைய இந்நேரம் 2011.04.07ஆம் திகதிய இலக்கம் 1700/18 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நியம நேரம், சர்வதேச நியம நேரத்திலும் பார்க்க 5:30 மணி நேரம் முன்னோக்கி காணப்படுகின்றது. முதற்கட்டமாக இணையத்தளம் ஊடாக இலங்கையின் நியமநேரம் வெளியிடப்படுவதுடன், நேரம் தொடர்பான தேசிய தரமாகக் காணப்படும் உருபிடியம் அணு கடிகாரத்தின் நேரம் இணையத்தளம் ஊடாக வெளியிடப்படும். இலங்கையின் அதிகாரபூர்வ நேரம் பற்றிய விபரங்களை www.sltime.org என்ற இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- President declares SL standard time, தெரன, ஏப்ரல் 12, 2011
- இலங்கையின் நியமநேரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு, தினகரன், ஏப்ரல் 12, 2011