இஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது (மங்கள்யான்)

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 24, 2014

இஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 100 வது விண்வெளித் திட்டமான பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் வெற்றிகரமாக செப்டம்பர் 9, 2012 அன்று விண்ணில் ஏவப்பட்டது.

மங்கள்யான் விண்கலம் சரியான திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் 2014 ஆம் ஆண்டு 24 ஆம் தியதி இந்திய நேரப்படி காலை 7.41மணிக்கு செலுத்தப்பட்டது. இவ்விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த எட்டு சிறிய இயந்திரங்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[1][2] விண்கலத்தின் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது விண்கலத்திற்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இயந்திரங்கள் எரியூட்டப்பட்டு அதன் திசைவேகம் குறைக்கப்படும் போது, செவ்வாய் கிரகம் விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையே இருந்ததால் விண்கலமும் தரைக்கட்டுப்பாட்டு மையமும் எந்த வித சமிக்கைத் தொடர்பும் கொள்ளமுடியாத நிலையில் இருந்தன. மீண்டும் விண்கலம் பூமியைத் தொடர்பு கொள்ளும் போது, 1099 மீட்டர்கள்/வினாடி சமிக்கை கிடைத்தது. இதன் மூலம் விண்கலம் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் போது விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 12.5 ஒளி நிமிடங்கள் ஆகும்.


51 முயற்சிகளில் அமெரிக்கா, உருசியா, ஐரோப்பா (பல்வேறு நாடுகள் சேர்ந்தது) ஆகியவையே வெற்றி பெற்றுள்ளன. இப்போது இந்தியாவும் இந்த நாடுகள் வரிசையில் இணைந்துள்ளது. இந்தியாவின் மங்கள்யான் முதல் முயற்சியிலேயே செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் முதல் முயற்சியில் செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்த மற்றொரு அமைப்பாகும். ஆனால் விண்கலம் ஐரோப்பிய அமைப்பினுடையதாக இருந்தாலும் இது உருசியாவின் ஏவுதளத்தில் உருசிய ஏவுகணை மூலம் ஏவப்பட்டது. 2013, நவம்பர் 5 அன்று ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டு 10 மாதங்கள் 680 மில்லியன் கிமீகள் (422 மில்லியன் மைல்கள்) பயணப்பட்டு செவ்வாயின் சுற்று வட்டப்பாதையை அடைந்துள்ளது


மங்கள்யான் விண்கலத்தின் எடை 1,350 கிலோகிராம் ஆகும்.



மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]