ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 22, 2011

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கே ஆளுநர் மாளிகைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பி்ல 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இங்குள்ள ஆளுநர் சலாம் ஹூசைன் வீட்டு முன்பு 30 மீட்டர் தூரத்தில் காவல் துறையினரின் சோதனைச் சாவடி அமைத்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றி வந்த தற்கொலைப்படையினர் சோதனைச் சாவடி மீது மோதினர். இதில் இருந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் ஆளுநர் வீட்டுக்கு முன்பு காவலுக்கு இருந்த 25 காவல்துறையினர் இறந்தனர். மேலும் 30 காவல்துறையினர் காயம் அடைந்து மருத்துவமனயில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.


மூலம்[தொகு]