ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 26, 2013

நேற்று வெள்ளிக்கிழமை அன்று தமது 14 எல்லைக் காவல் படையினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக ஈரான் சிறை வைக்கப்பட்டிருந்த 16 போராளிகளைத் தூக்கிலிட்டது.


நேற்றைய தாக்குதல் நடந்த செகெடான் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையிலேயே இந்தப் 16 பேரும் தூக்கிலிடப்பட்டனர். எல்லைக் காவலர் தாக்கப்பட்டமைக்கும், தூக்கிலிடப்பட்ட கைதிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.


போராளிகளின் நேற்றைய தாக்குதல் பாக்கித்தானுடனான தென்கிழக்கு எல்லையில் இடம்பெற்றுள்ளது. ஜுண்டல்லா என்ற சுணி இசுலாமிய ஆயுதக் குழு இப்பகுதியில் கடந்த காலங்களில் பல தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது.


மூலம்[தொகு]