உலக நாகரிகத்துக்கு காந்தியின் பங்களிப்பு - பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண்

விக்கிசெய்தி இலிருந்து
இங்கிலாந்தில் காந்தி, 1931

ஞாயிறு, ஆகத்து 2, 2009, இங்கிலாந்து:


இங்கிலாந்து வல்லாதிக்கத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்தவர் மகாத்மா காந்தி. இவரை பற்றி புத்தகம் எழுதப்போவதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறி இருக்கிறார். `உலக நாகரிகத்துக்கு காந்தியின் பங்களிப்பு பற்றி எழுதப்போகிறேன்' என்று கார்டன் பிரவுன் கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், "காந்தி 20-ம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர் என்றும், அவர் பதவி ஆசை இல்லாதவர் என்றும் மக்களின் மனதை மாற்றி வெற்றி பெற விரும்பினார் என்றும் குறிப்பிட்டார்.


"காந்தி தான் எனக்கு மானசீக குரு. எனக்கு மட்டும் அல்லாமல் உலகில் பல தலைவர்களுக்கும் காந்தி தான் உற்சாக ஊற்றாக விளங்கினார். அஹிம்சாவாதியாக அவர் எப்படி மாறினார் என்பதையும் ஒத்துழையாமை போராட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதையும் நான் நிறைய படித்து இருக்கிறேன் என்றும் கார்டன் கூறினார்.

மூலம்[தொகு]

  • தினத்தந்தி