உள்ளடக்கத்துக்குச் செல்

உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு செப்டம்பர் 6, 2009, பப்புவா நியூ கினி:


பப்புவா நியூ கினியின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் உலகிலேயே மிகப்பெரிய எலி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த எலி 1.5 கிலோ எடையும் 82 சென்டிமீட்டர் நீளமும் கொண்டிருந்தது. இந்த எலி இனமானது உலகில் பொசாவி மலைப்பகுதியில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுகிறது. குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது அடர்த்தியான பழுப்பு நிற மயிரினைக் கொண்டுள்ளது.


தற்போதைக்கு இந்த எலி பொசாவி கம்பளி எலி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அறிவியல் பெயர் சூட்டப்படவில்லை.


மூலம்

[தொகு]