எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரகோய் பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 23, 2011

எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரகோய் பதவியேற்றார். எசுப்பானிய மக்கள் கட்சியைச் சேர்ந்த இவர் சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மாரியானோ ரஜோய்

நேற்று முன்தினம் அந்நாட்டு அரசர் உவான் கார்லோசு முன்னிலையில் பிரதமர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.


எசுப்பானியாவில் நிலவும் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி காரணமாக இவரது கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றது. ஐரோப்பிய நாடுகளிளில் மிக அதிக அளவு வேலையில்லாத் திண்டாட்டம் எசுப்பானியாவிலேயே நிலவுகிறது. இங்கு 21.5 சதவீத வேலையில்லாத் திண்டாட்டமும், கடுமையான நிதிப் பற்றாக்குறையும் நிலவுகிறது. 2009-ம் ஆண்டு வீடு மற்றும் நில உடமைகள் துறையில் நிலவிய கடுமையான பின்னடைவும் பொருளாதார திரமற்ற நிலைக்கு முக்கிய காரணமாகும்.


மூலம்[தொகு]