எண்டவர் விண்ணோடம் தரையைத் தொட்டது

விக்கிசெய்தி இலிருந்து
அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் எண்டவர்

வெள்ளி, சூலை 31, 2009, ஐக்கிய அமெரிக்கா


ஏழு விண்வெளி வீரர்களுடன் 16-நாள், 65-இலட்சம் மைல் விண்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்திய நேரப்படி 20:18-க்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் எண்டவர் விண்ணோடம் பாதுகாப்பாகத் தரையைத் தொட்டது. "எசு.டி.எசு-127" என்றழைக்கப்பட்ட இத்திட்டத்தில் முதன்மைப்பளுவாக ஜப்பானிய கிபோ கலம் எடுத்துச் செல்லப்பட்டது.


இத்திட்டத்தின் மூலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் அதிகூடிய எண்ணிக்கையான விண்வெளிவீரர்கள் (13 பேர்) ஒரே நேரத்தில் தங்கியிருந்த சாதனை படைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டுக்குள் இவ்வெண்வெளி நிலையத்தை கட்டி முடிப்பதற்கு இன்னும் 7 விண்ணோடப் பயணங்களை மேற்கொள்ளுவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இப்போது 4 படுக்கையறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் அளவைக் கொண்டுள்ள விண்வெளி நிலையம் பத்தாண்டுகளுகளுக்கு முன்னர் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.

மூலம்[தொகு]