ஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 8, 2010

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் 650 நாடாளுமன்ற தொகுதிகளில் 649 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.


Incumbent பிரதமர் கார்டன் பிரவுன், தொழிலாளர் கட்சி
படிமம்: ΠΑΣΟΚ.
டேவிட் கேரூன், கன்சர்வேட்டிவ் கட்சி
படிமம்: World Economic Forum.
நிக் கிளக், லிபரல் டெமாக்ரடிக்
படிமம்: Nick Clegg.

நிபுணர்களின் முந்தைய கணிப்புப்படி அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சிக்கு தொகுதிகள் வாரியாகவும், வாக்குகள் வீதத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது 258 தொகுதிகளே கைப்பற்றியுள்ளது.

டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்துள்ளன. நிக் கிளக் தலைமையிலான லிபரல் கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய இராச்சியத்தின் மரபுப்படி யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் ஆளும் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சிக்கு வாக்குகள் வீதத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் அது போன்ற முயற்சியை மேற்கொள்ள ஆளும் கட்சிக்கு தார்மீக உரிமையில்லை என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.


கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி பொதுக்கருத்துக்கள் அடிப்படையில் நிக் கிளக்கின் லிபரல் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அது நிறைவேறாத பட்சத்தில் லிபரல் உடன் கூட்டணி வைக்க முயற்சி செய்யப்போவதாக கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போதைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை, இராணி யாரை ஆட்சி அமைக்க அழைக்கிறார் என்பதுவரை, என அவரது வணிக ஆலோசகர் லார்ட் மேன்டல்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் என்கிற வகையில் பிரிட்டனின் நிலைத்தன்மை காக்கப்படுவதை உறுதி செய்வது தனது கடமை என்பதால் இராஜினாமா செய்யப்போவதில்லை என கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.


உலக பொருளாதார சரிவுக்குப் பின் நடைபெற்ற இத்தேர்தலை உலகம் உன்னிப்பாக கவனித்தது. பொருளாதார சரிவின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுத்திய நாடுகளுள் ஐக்கிய இராச்சியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற மரபுப்படி தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் பட்சத்தில் அப்போதைய ஆளும் கட்சி ஆட்சியை தொடரலாம், பின்னர் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

மூலம்[தொகு]