ஐக்கிய இராச்சியப் பிரதமர் அந்நாட்டுப் பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 7, 2010


ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கார்டன் பிரவுன் அந்நாட்டின் அடுத்த பொதுத்தேர்தல் 2010, மே 6ம் நாள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக அந்நாட்டின் இராணி எலிசபெத்தை சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கேட்டுக்கொண்டதை இராணி ஓப்புக்கொண்டார். அதன்படி வருகிற ஏப்ரல் 12ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.


இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன்.
படிமம்: உலக பொருளாதார மன்றம்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் வருகிற 8ம் தேதி கூடுகிறது. அடுத்த கூட்டத்தொடர் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மே 18ம் தேதி தொடங்கும்.


ஐக்கிய இராச்சியத்தில் தொழில் கட்சி, லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை மூன்று முக்கிய கட்சிகளாக உள்ளன. கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தொழிலாளர் கட்சியே ஆட்சியில் உள்ள போதிலும் தற்போதைய பரவலான கருத்துக்கணிப்புகளின் படி கன்சர்வேட்டிவ் கட்சி முன்னனியில் உள்ளது.


ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்கு 650 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

மூலம்[தொகு]