ஒரு கோடி பேசுபுக் பயனர் விவரங்கள் கசிவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 29, 2010


ஒரு கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் 1 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனர் விவர பட்டியலை அளித்துள்ளார். அவர் அந்த தகவலை பொது வலைவாசலில் கண்டெடுத்ததாக பேசுபுக் மீது குறை கூறியுள்ளார்.


பேசுபுக்

ரோன் போவேஸ் என்ற சுகல் செக்யூரிட்டி ஆய்வாளர் கூறியதாவது, "பேசுபுக் பொது வலைவாசலில் அவர்கள் குறைந்த விவரங்களை சிலருடன் பகிர்ந்த பயனர்களின் விவரங்களை பட்டியலிட்டு உள்ளது. இதனால் ஒருவரின் இடம், அவரது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவலை எளிதில் கண்டறியலாம்."


மேலும் போவேஸ் கூறியபோது, பிட்டோறேன்ட் பிணையத்தில் 2.8 ஜிபி-க்கு பேசுபுக் பயனர் பட்டியல் கிடைகிறது என்று புகார் கூறியுள்ளார். அவர் இதை வெளியிடுவதற்கு காரணம் பேசுபுக்கில் உள்ள கடினமான தனியுரிமை அமைப்புகள் தான் இதற்கு காரணம் என்பதை உணர்த்தி பேசுபுக் பயனர்கள் இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு அடையவே என்று அவர் கூறினார்.

மூலம்[தொகு]