கத்தார் வணிக மையத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 29, 2012

மத்திய கிழக்கின் கத்தார் நாட்டின் தலைநகர் டோகாவில் வணிகத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.


விலாச்சியோ என்றழைக்கப்படும் இந்தக் கடைத்தொகுதி தீவிபத்தில் இறந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் ஆவர். இவர்களில் 4 பேர் எசுப்பானியர், மூவர் நியூசிலாந்தவர்கள், மற்றும் ஒரு குழந்தை பிரான்சைச் சேர்ந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்தில் பிலிப்பீன்சைச் சேர்ந்த 4 ஆசிரியர்களும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.


கட்டிடத் தொகுதியில் உள்ள பாலர் பள்ளி ஒன்றிலேயே முதலில் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. நேற்று திங்கட்கிழமை பகல் 11:00 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக கத்தார் உட்துறை அமைச்சர் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடத் தொகுதி முறையாகத் திட்டமிடப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]