கராச்சியில் தொழிற்சாலைத் தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்தெம்பர் 12, 2012

பாக்கித்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 247 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீவிபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். எரியும் கட்டடத்தின் உள்ளே இருந்து பலர் வெளியே குதித்தனர். 40 இற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபடுத்தப்பட்டன.


நாலு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை இன்று காலை வரை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும், இறந்த உடல்கள் பல இடிபாடுகளுக்கிடையேயிருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆடைத் தொழிற்சாலைகள் பாக்கித்தானின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆடை உற்பத்திப் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 55.6 விழுக்காடு ஆகும்.


நேற்று இடம்பெற்ற வேறொரு சம்பவத்தில் லாகூர் நகரில் ஒரு காலணித் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். லாகூர் தீ மின்சார ஒழுக்கினால் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மூலம்[தொகு]