உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வியில் முன்னேறும் திரிபுரா

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 18, 2013

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் கல்வியறிவு வளர்ச்சி விகிதம் 73.3 சதவீதத்தில் இருந்து 87.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வியறிவு வளர்ச்சியில் நாட்டில் 4வது மாநிலமாக திரிபுரா உள்ளது என 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் துவக்கக் கட்ட அறிக்கை அடிப்படையில் இந்த புள்ளி விவரம் தெரிய வந்துள்ளது.


திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 36 லட்சத்து 73 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய கணக்கெடுப்பில் இந்த மாநில மக்கள் தொகை 31 லட்சத்து 99 ஆயிரத்து 203 ஆக இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. திரிபுராவின் மொத்த மக்கள் தொகையில் 31.8 சதவீதத்தினர் பழங்குடியினராகவும், 17.8 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாகவும் உள்ளனர்.


திரிபுராவில் பெண்-ஆண் விகிதா சாரம் 948-ல் இருந்து 960 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பெண்-ஆண் விகிதாசாரம் ஆயிரத்திற்கு 943 என்ற நிலையில் உள்ளது. ஆனால் திரிபுரா மாநிலத்தில் ஆயிரம் ஆண்கள் 960 பெண்கள் என்ற முன்னேற்றம் உள்ளது. இந்த அறிக்கை வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டது.


இவ்வாண்டு செப்டம்பருக்குள் திரிபுரா மாநிலம் கல்வியறிவில் 100 விழுக்காட்டை எட்டிவிடும் என திரிபுராவின் முதலமைச்சர் மனிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]