கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 22 செப்டெம்பர் 2016: செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி
- 29 சனவரி 2013: கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு
- 14 பெப்பிரவரி 2012: கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார்
வியாழன், திசம்பர் 12, 2013
திராவிட மொழிகளில் முக்கியமானதும், தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடையதுமான கன்னட மொழியில் கன்னட விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இருந்த போதும் ஏனைய திராவிட மொழிகளை விடவும் குறைந்தளவிலான பங்களிப்பையே கன்னட விக்கிப்பீடியா பக்கம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கின்றது.
இதுவரை கன்னட விக்கிப்பீடியாவில் 15,696 (அக்டோபர் 2013) கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஏனைய திராவிட மொழிகளை விடவும் மிக குறைவானதாகவே இருக்கின்றது. தமிழில் 56, 000 கட்டுரைகளும், தெலுங்கு மொழியில் 53,000 கட்டுரைகளும், மலையாளத்தில் 33,528 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. பிற இந்திய மொழிகளான இந்தியிலேயே இந்திய அளவில் அதிக அளவாக ஒரு லட்சம் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. மராத்தி மொழியில் 40,000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
கன்னட மொழியில் சுமார் 40 பங்களிப்பாளர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். ஆனால் பல கட்டுரைகளின் தரமும், தகவல் ஆழமும் தாழ்ந்த நிலையில் தான் உள்ளது என்பது வருந்ததக்கது. கன்னட மொழி விக்கிப்பீடியாவில் பலரும் தொடர்ந்து பங்களிக்கவும், புதியவர்களை பங்களிக்கச் செய்யவும் வேண்டும் என கன்னட மொழி ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 17 அன்று கன்னட விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்
[தொகு]- 10 years on, Kannada Wikipedia lags, தி இந்து, டிசம்பர் 12, 2013
- Kannada Wikipedia completes 10 years 10 years on, டிஎன்எ இந்தியா, டிசம்பர் 12, 2013
- 10 years of Kannada Wikipedia: Many more miles to go!, பெங்களூர் சிட்டிசன், நவம்பர் 18, 2013
- 10th anniversary of Kannada wikipedia 10 years on, தி டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 15, 2013