கிக்சு போசானை ஒத்த அடிப்படைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செர்ன் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 4, 2012

ஜெனிவாவிலுள்ள செர்ன் என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், கிக்சு போசானைப் போன்று புதிய துகள் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.


50 ஆண்டுகளுக்கு பிறகு, கிக்சு போசானின் கடவுள் துகளைப் போன்ற ஒரு துணை-அணுத் துகளை கடந்த புதன்கிழமை செர்னின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இது தொடர்பாக பேசிய செர்னின் தலைமை இயக்குநர் ரோல்வ் கியர் "நாங்கள் இயற்கையை புரிந்துகொள்வதில் ஒரு படிக்கல்லைத் தாண்டியுள்ளோம்" என்றார். மேலும் "இவ்வாறு கண்டறிந்த கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றதான இத்துகளினால், விரிவாக இதனைப் படிக்கவும், பெரிய அளவில் புள்ளிவிவரங்களை சேகரிக்கவும் வேண்டிய கட்டாயத்தை இது உருவாக்கியுள்ளது" என்று அவர் கூறினார். "இந்த அண்டத்தில் உள்ள புரியாத பல புதிர்களை அறிய இத்தகைய முயற்சி உதவும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


கடவுள் துகள் பற்றிய காணொளியை செர்ன் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.


"அதன் நிறையானது 100 புரோத்தனை விட அதிகமாக இருக்கும். இது இரு ஒளியன்களாக சிதைவதை நம்மால் பார்க்க முடிவதாய் இருப்பதினால் தான் இதனை கிக்சு போசானின் கடவுள் துகள் போன்றது என கூறுகிறோம். இது முழுமைப்பெற்ற சுழற்சியை கொண்டதாகவுள்ளது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இன்னும் இதன் பண்புகளை மேலும் படிக்க வேண்டியுள்ளது" என்று ஊடக தொடர்பாளர் ஜோ இன்கான்டலா கூறினார்.


மூலம்[தொகு]