கொலம்பியாவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 18, 2010

கொலம்பியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 70 பேர் வரையில் சுரங்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


அமாகா என்ற இடத்தில் உள்ள சான் பெர்னாண்டோ சுரங்கத்தில் புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10:00 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.


சுரங்கத்தில் சிக்குண்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான பணி என அதிகாரிகள் தெரிவித்தனர். "உண்மையைச் சொல்லப்போனால், இவர்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம்," என தேசிய அநர்த்த அதிகாரி ஒருவர் உள்ளூர் வானொலிக்குத் தெரிவித்தார்.


இவ்வெடிப்பு ஏன் நிகழ்ந்ததென்பது அறிய முடியாதுள்ளது. எனினும் சுரங்கத்தினுள் சில வாயுக்கள் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கொலம்பியா முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாகும். தென்னமெரிக்காவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நிலக்கரி வளம் இங்குள்ளது.

மூலம்[தொகு]